மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் தகதா கோஷ்.  இவர் பிரபலமான ஃபேஷன் கலைஞர். இவரின் குழுவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் என்று கூறி இருவர் பல பெண்களை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமூக வலைதளத்தில் பிரதிக் பால் (37), தபன் பால் ஆகியோர் போலியாக கணக்கு தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் மாடலாக விரும்பும் பெண்களை குறி வைத்து திரைப்படத்தில் நடிக்க வைப்பதாகவும் மாடலிங் செய்ய வைப்பதாகவும் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் ஸ்டூடியோவுக்கு அந்த பெண்களை வரவழைத்து முதலில் நிர்வாணமாக போட்டோ சூட் எடுத்துள்ளனர். பின்னர் அதை வைத்து மிரட்டி அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களால் 22 மற்றும் 25 வயதுடைய இரு பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தகதா கோஷ் செல்போன் நம்பரை கண்டுபிடித்து இது பற்றி அவரிடம் கேட்டனர்.

உடனடியாக அவர் இரு பெண்களையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரதீக் பாலை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில் மற்றொருவரை தேடி வருகிறார்கள். முதலில் அந்த பெண்களுக்கு மாடலிங் ஆசை காட்டி அவர்களை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து நார்மலாக போட்டோ சூட் நடத்தியுள்ளனர். பின்னர் ‌நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு அவர்கள் வற்புறுத்திய நிலையில் அந்த பெண்கள் மறுத்தால் மாடலிங் கனவை மறந்து விடுமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அந்த பெண்கள் பயந்து போய் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு நிர்வாணமாக போட்டோ சூட் எடுத்து பின்னர் அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இவர்களால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.