அசாம் மாநிலத்தில் பத்மேஸ்வர் என்ற 71 வயது நபர் வசித்து வருகிறார். இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் கடந்த காலங்களில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தன்னுடைய சகோதரர்கள் இறந்த பிறகு ஒரு முதியோர் இல்லத்தில் அடைக்கலமானார். இவர் கவுகாதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கடந்த வருடம் ஜனவரி மாதம் சேர்ந்தார். இதேபோன்று மற்றொரு முதியோர் இல்லத்தில் ஜெய பிரபா என்று 65 வயது மூதாட்டி இருந்தார். இவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெயபிரபா சகோதரர் இறந்துவிட்டதால் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்து விட்டனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின் போது பரமேஸ்வர் ஹிந்தி மற்றும் பிகு பாடல்களை ஜெயபிரபாவிடம் பாடி காண்பித்தார். இதில் ஜெயபிரபாவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. இதேபோன்று பரமேஸ்வரும் ஜெய பிரபாவை காதலித்தார். இந்த காதல் விவகாரம் முதியோர் இல்லத்திற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்களுடைய திருமணத்தை மேன்லிசா என்ற ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வைத்தது. இவர்கள் இருவருக்கும் முதியோர் இல்லத்தில் ஒரு தனி அறையை ஒதுக்கியுள்ளனர். மேலும் இளமையான பருவத்தில் காதலித்த திருமணம் செய்து கொள்ளும் நிலையில் தற்போது முதியவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது. அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.