இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீட் தொடர்பான முக்கிய வழக்கு வருகின்ற ஜூலை எட்டாம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.