பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிக பிரபலமான திட்டம். இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு உஜ்வாலா சிலிண்டர் மானியத்திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

2025 ஆம் வருடத்திற்குள் இந்த திட்டத்திற்கான மொத்த மாநில செலவு 12000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுடைய முன்னேற்றத்தை மனதில் வைத்து தான் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மானிய திட்டத்தில் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது .அது மட்டும் இன்றி இந்த திட்டத்தின் கீழ் யாராவது முதன்முறையாக சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு வாங்கினால் அவர்களுக்கு இஎம்ஐ வசதியும் வழங்கப்படுகிறது.