தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற தளத்தில் இன்று முதல் மே.18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மே.21ல் முடிவு தெரிவிக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020- க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் துவங்கிய, 10 நாட்களுக்குள் 80,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மே.18 வரை விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 8,000 தனியார் பள்ளிகளில், 88,000 இடங்கள் உள்ளன.