தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், திருவெண்ணைநல்லூரில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் வழக்கம் போல ஒரு அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த ஜெயராமன் அதிகளவு மதுப்பழக்கம் கொண்டவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவத்தை கள்ளச்சாராயம் மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றார் இபிஎஸ் என்று கூறியுள்ளார்.