
அமெரிக்காவை சேர்ந்தவர் டயானா ஆர்ம்ஸ்ட்ராங் .இவருடைய மகள் கடந்த 1997 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் மகள் இறந்து போனதால் சோகத்தில் இருந்த டயானா மகள் நினைவாக ஏதாவது செய்ய நினைத்துள்ளார். அப்போது மகளுக்கு நகம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் அவருடைய நினைவாக டயானா நகம் வெட்டுவதை நிறுத்தி நீளமாக வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
இதனை அடுத்து இவருடைய இரண்டு கைகளிலும் நீளமாக மொத்தம் 136.58 சென்டிமீட்டர் நகங்கள் வளர்ந்துள்ளது. இதனை அடுத்து இவர் நகங்களை நீளமாக வளர்த்தவர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.