தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் விஜய்யுடன் மெர்சல், அஜித்துடன் விசுவாசம் போன்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஆனவர் நடிகை சுரேகா வாணி. இவர் தெலுங்கில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் இவருடைய கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019 ஆம் வருடம் மாரடைப்பால் திடீரென்று உயிரழந்தார். கணவர் மறைவிற்குப் பிறகு மகளோடு தனியாக வசித்து வருகிறார். தற்போது 46 வயதாகும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து சுரேகா வாணி எந்த ஒரு கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வருவதோடு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மொட்டை அடித்து இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.