இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பாகிஸ்தான் அரசு, தற்போது உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிடம் கூடுதல் கடனுக்காக விண்ணப்பித்துள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, உலக வங்கி, ஐஎம்.எஃப் (IMF) உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கையை பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே பெரும் வெளிநாட்டு கடனில் மூழ்கியுள்ள பாகிஸ்தான், இந்த புதிய தாக்குதலால் இன்னும் நிதிச்சிக்கலில் சிக்கியுள்ளது. எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து, மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்திய தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக வாழ்வதற்கே மன்றாடும் நிலைமைக்கு பாகிஸ்தான் அரசு சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. சர்வதேச அளவில் நம்பிக்கை இழந்த பாகிஸ்தான், புதிய கடனுக்காக மீண்டும் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.