இரவு உணவுக்குப் பிறகு சாதம் மீதமாவது பல வீடுகளில் வழக்கமான ஒன்றுதான். மறுநாள் அதை மீண்டும் சாதமாக சாப்பிடுவதற்குப் பதிலாக, சுவையான புதிய உணவாக மாற்றலாம். அந்த வகையில், மீதமான சாதத்துடன் சுரைக்காயை சே#சுரைக்காய் #மீதமானசாதம் #சமையல்குறிப்புகள்

இதற்கு 2 கப் மீதமான சாதம், ஒரு கப் துருவிய சுரைக்காய், ஒரு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, அம்சூர் தூள் அல்லது எலுமிச்சைச் சாறு, எண்ணெய் அல்லது நெய், கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு தேவைப்படும்.

முதலில் குளிர்ந்த சாதத்தை உதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, துருவிய சுரைக்காயை போட்டு மூடி வைத்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வேகவிட வேண்டும். சுரைக்காயில் உள்ள தண்ணீர் வற்றியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து கிளற வேண்டும்.

அதன் பிறகு மீதமான சாதத்தைச் சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கலந்து விட வேண்டும். இறுதியில் அம்சூர் தூள் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சுரைக்காய் ரைஸ் தயார். இதை தயிர் பச்சடி அல்லது அப்பளத்துடன் பரிமாறலாம். ஆனால், மீதமான சாதத்தைப் பயன்படுத்தும்போது அது சரியாக குளிர்வித்து பாதுகாப்பாக சேமிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்; நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட சாதத்தை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.