கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே காட்பாடி பகுதியில் பாஸ்கர் என்ற 34 வயது ஜிம் ட்ரைனர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா (33) என்ற பெண்ணுடன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் பாஸ்கர் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியும் அந்த உடற்பயிற்சி நிலையங்களில் ஜிம் ட்ரைனர் ஆக இருந்தார். இந்நிலையில் பாஸ்கருக்கு ஜிம்முக்கு வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். இது சசிகலாவுக்கு தெரிய வரவே அவர் தன் கணவரிடம் சண்டைபோட்டார். பின்னர் இரு குடும்பத்தினரும் அவ்வப்போது அவர்களை சமாதானம் செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சசிகலா இறந்து விட்டதாக பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது உடலுறவின்போது தன் மனைவி இறந்து விட்டதாக பாஸ்கர் கத்தி கதறி அழுத நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சசிகலாவின் குடும்பத்தினர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே பின்னர் அவர்கள் பாஸ்கரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது முதலில் இரவில் தன்னுடைய மனைவியும் நானும் அதிக நேரம் உடலுறவில் இருந்ததால் மூச்சு திணறி இறந்து விட்டதாக கூறினார். ஆனால் கடைசியாக கழுத்தை நெரித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஜிம் மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.