இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இம்பீரியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டனர். அதாவது மக்களிடம் தூங்குவதற்கான நேரம், எவ்வாறு தூங்குகிறார்கள் போன்றவைகள் தொடர்பாக ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். இதற்காக சுமார் 26,000 பேரிடம் அவர்கள் தூங்கும் நேரம் மற்றும் விழிக்கும் நேரம், எப்படி தூங்குகிறார்கள் போன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில் அதிகாலை சீக்கிரம் எழுபவர்களை விட இரவில் தாமதமாக தூங்குபவர்களின் அறிவு வளர்கிறது என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக அதிகாலையில் சீக்கிரம் எழுந்தால் அறிவாற்றல் வளரும் படிப்பது மனதில் பதியும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது இரவில் தாமதமாக தூங்குபவர்கள்தான் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் அதே சமயத்தில் அதிகாலை சீக்கிரம் எழுபவர்கள் ஆற்றல் குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.