விருதுநகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த 28ஆம் தேதி இரவு விருதுநகரில் இருந்து ஆம்னி பேருந்தில் கோவைக்கு சென்றுள்ளார். மறுநாள் பேருந்தில் இருந்து அந்தப் பெண் கீழே இறங்கும் போது பேருந்தில் கிளீனர் ஆக பணியாற்றிய சுபாஷ் சந்திர போஸ் (41) என்பவர் பாலியல் சீண்டரில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அந்தப் பெண் சத்தம் போட்ட நிலையில் அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த உறவினர்கள் கிளீனரை கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.