அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது ஓபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிப்போம். ஒருவேளை பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். எங்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி வருகிறார்கள். கட்சி விதிகளின்படி தான் அதிமுக நடக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தர்மயுத்தம். இரட்டை இலை சின்னத்தை முடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.