ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலே தேவையில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு, ஒரு எம்எல்ஏ காலமானால் அவர் சார்ந்த கட்சிக்கு அந்த இடத்தை ஒதுக்கிட வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்தான் என்றும்,  இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.