
அதிமுக விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது அதிமுகவில் நிலவும் உட் கட்சி பூசல்கள் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த தீர்ப்புக்கு பிறகு செங்கோட்டையன் தன்னுடைய வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு எடப்பாடி பழனிச்சாமி பற்றி நான் சொன்ன காரணம் அத்துடன் முடிவடைந்துவிட்டது.
நான் என்னுடைய ஆதரவாளர்களுடன் தீர்ப்பு வந்த பிறகு எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. அவர்கள் பொது கூட்ட விழா அழைப்பிதழ் வழங்குவதற்காகவே வந்தார்கள். தினசரி என்னுடைய வீட்டிற்கு 200 முதல் 300 பேர் வருவார்கள். என்னுடைய வீட்டிற்கு தொண்டர்கள் கூடுவது வழக்கமானது தான் எந்தவித ஆலோசனையும் நடக்கவில்லை என்று கூறினார். மேலும் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் செங்கோட்டையன் அதனை மறுத்த நிலையில் கட்சி எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார்.