சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் எக்குத்தப்பாகப் பேசி தொண்டர்களை அதிர வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், விறுவிறுப்பான பேச்சினிடையே “தமிழக வெற்றி கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்” எனத் தவறுதலாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் பதற, அந்த இடமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

​ஆனால், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், “இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கேட்டே பல வருஷமா பழகிப் போச்சு.. அதான் அப்படி வந்துடுச்சு” எனச் சிரித்தபடியே சமாளித்தார். அவரது இந்தச் சமயோசித விளக்கத்தைக் கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் கைதட்டிச் சிரித்தனர். அதிமுக-விலிருந்து தவெக-விற்கு ஆதரவு கேட்டு வந்த இடத்தில், பழக்கதோஷத்தில் அவர் மாற்றிப் பேசிய இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டாகி வருகிறது.