பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரோஸ்பூர் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி ஆஷா என்ற இளம்பெண் உறவினருடன் வழிபாட்டு தளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஆஷாவின் கையில் இருந்த பர்ஸை பிடுங்கி சென்றுள்ளார். அந்த பெண் போராடி தனது பர்ஸை மீட்டார்.

ஆஷா கால் தடுமாறி கீழே விழுந்த போதும் மர்ம நபர்கள் தரதரவென இழுத்து சென்றுள்ளனர். ஆனாலும் விடாமல் ஆஷா போராடி தனது பர்ஸை பிடுங்கி கீழே விழுகிறார். பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து ஆஷாவுக்கு உதவி செய்கின்றனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.