
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பலவிதமான வீடியோக்கள் வெளியாகிய அதிர்ச்சியூட்டுவதாகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இறக்கைகளுடன் பிறந்த ஒரு குழந்தை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு குரல் கொடுத்தவர் குழந்தையின் பெயர் ரிக்கி என்றும் குழந்தை பிறப்புக்கான காரணம் குறித்தும் விவரிக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் இயற்கையின் அதிசயம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இது போலி என்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரிக்கி என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைத் தான் தற்போது சிலர் வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். பழைய வீடியோவான இதை தற்போது நடந்தது போன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இதன் மூலம் இறக்கைகளுடன் குழந்தை பிறந்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.