பல ரயில் பயணிகள் ரயில்களின் நிலையை அறிந்து கொள்வதற்கு பல்வேறு செயலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது எதுவுமே தேவையில்லாமல் உங்களுடைய போனில் உள்ள கூகுள் மேப் மூலம் ரயில் நிலையை அறிந்து கொள்ள முடியும்.

அதற்கு நாம் செல்லும் இலக்கை உள்ளிட்டு ரயில் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த வழித்தடத்தில் என்ன ரயில்கள் உள்ளன, எத்தனை மணிக்கு கிளம்பும் என்ற முழு விவரத்தையும் அங்கு தெரிந்து கொள்ளலாம். ரயிலின் பெயரை கிளிக் செய்தால் அதன் இயங்கும் நிலையை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.