கடந்த 2018 ஆம் ஆண்டு பரசுராமன் பெட்லா இயக்கத்தில் வெளியான கீதா கோவிந்தம் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆகவும்  நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து “டியர் காம்ரேட்” எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் தேதி பரத் கம்மா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படம் வெளியாகி 5 வருடங்கள் அன நிலையில், இதுகுறித்து ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டியர் காம்ரேட் படத்தை நேசித்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது தான் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதையும் நினைவு கூர்ந்தார். டியர் காம்ரேட் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் சில பேர் என்னை லில்லி என்று அழைப்பதாக கூறினார். மேலும் ராஷ்மிகா  மந்தனா  தற்போது புஷ்பா 2, குபேரா, சிக்கந்தர் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.