
ஜெயிலர் படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்ட ட்விட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பிரபலங்கள் அனைவரும் ஜெயிலர் படம் மெகா வெற்றியை அடையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதிலும், குறிப்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் அவர்கள் பேசிய போது, இயக்குனர் நெல்சன் உங்களது உழைப்புக்கும், திறமைக்கும் கண்டிப்பாக ஜெயிலர் மாபெரும் வெற்றி படமாக அமையும். கவலை கொள்ள வேண்டாம் என ஆறுதல் தெரிவிக்கும் பாணியில் பேசி இருப்பார். அதேபோல இசையமைப்பாளர் அனிருத் அவர்களும், அதே பாணியில் ஜெயிலர் அமோக வெற்றி பெறும் என தெரிவிக்க, பீஸ்ட் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டு இவர்கள் பேசுவதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
தற்போது அதை உண்மையாக்கும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் தனது twitter பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து பதிவிட்ட கருத்து ஒன்று தற்போது சர்ச்சையாகியுள்ளது. அதில், தலைவர் நிரந்தரம் நெல்சா என மூன்று கோப்பைகள்-உடன் பதிவிட்டுள்ளார். அந்த மூன்று கோப்பைகளும் 3 வெற்றியை குறிக்கும் விதமாக உள்ளது. இயக்குனர் நெல்சன் மொத்தம் நான்கு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். அதில் மூன்று கோப்பையை மட்டும் பதிவிட்ட அனிருத் பீஸ்ட் தோல்வியை மறைமுகமாக குறிப்பிடுவதாக விஜய் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Thalaivar Nirandharam 🔥🔥🔥
Nelsaaa 🏆🏆🏆— Anirudh Ravichander (@anirudhofficial) August 10, 2023