அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வினோத போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்பவர்கள் பர்மிய வகை மலைப்பாம்புகளை கொல்ல வேண்டும். ஃப்ளோரிடா பைத்தான் சவால் எனும் இந்த போட்டியில் யார் அதிக எண்ணிக்கையிலான மலைப்பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இந்த போட்டிக்கு பரிசு தொகையாக 25 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ் மற்றும் பரிசு தொகைக்காக ஈர்க்கப்பட்டு ஆபத்து நிறைந்த இந்த போட்டியிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள். ஃப்ளோரிடாவின் தெற்கு பகுதியில் அதிக பர்மிய மலைப்பாம்புகள் மற்ற உயிரினங்களை கொன்று சுற்றுச்சூழல் சமநிலையை சேதப்படுத்துவதால் இத்தகைய போட்டி வைத்து அந்த மலைப்பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.