ஆந்திராவின் விசாகப்பட்டினம் ருஷிகொண்டா அருகே உள்ள கடற்கரையில் மீனவர்களின் வலையில் திங்கள்கிழமை வெவ்வேறு வடிவங்களில் இரண்டு அபூர்வ வகை மீன்கள் சிக்கியது. அந்த மீன்களின் பின்புறத்தில் நீளமான முதுகெலும்பும், கீழ்ப்புறத்தில் கால்கள் போன்ற இரண்டு எலும்புகளும் உள்ளன.

இது குறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் டாக்டர் பி.சீனிவாசராவ் கூறியதாவது: கடல்நீரில் ஆழமாகச் சுற்றித்திரியும் இந்த பவிரி மீன்கள் அரிதாகவே தென்படும், வானிலை மாற்றம் காரணமாக சில நேரங்களில் மேலே வரும்போது மீனவர்கள் வலையில் சிக்குகின்றன என்றார்.