இந்தியாவின் அஞ்சல் அலுவலகம் மூலம் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாதம் வரும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஐந்து ஆண்டு முதிர்வு காலம் கொண்ட இந்த திட்டத்தில் தனிநபர் ஒன்பது லட்சம் ரூபாய் வரையும் கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையும் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.4 சதவீதம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு மாத வருமானம் 5500 பயனாளர்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தின் முடிவில் வட்டியாக 3,33,000 கிடைக்கும். இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் நீட்டிக்க விரும்பினால் அதற்கு விருப்பமும் வழங்கப்படும். இருந்தாலும் முதிர்வு காலத்திற்கு முன்பு தொகையை எடுக்க விரும்பினால் அவர்கள் அபராதம் செலுத்த நேரிடும். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.