பிரபல இந்திய நடிகை ஷமிதா ஷெட்டி, ஜெய்ப்பூரில் இருந்து சண்டிகர் வரை பயணம் மேற்கொண்ட போது, பேக் எடை பிரச்சனையால் அவரது பேக் இறக்கிவிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர், விமான நிலையத்தில் காத்திருந்த போது, அவரது பேக் வரவில்லை என்ற தகவல் தாமதமாக கிடைத்தது. இதனை சுலபமாகத் தெரிவிக்காத விமானக் குழுவினரால் நடிகை பெரிதும் அதிருப்தி அடைந்தார்.

அவர் இண்டிகோ விமான நிறுவனத்துக்கான பணியாளரை அணுகி, தனது பேக் குறித்து தகவல்களைப் பெற முயன்றார். அந்த பணியாளரால் ஷமிதாவுக்கு உதவ முடியவில்லை. பின்னர் நீண்ட நேரம் காத்திருந்து தனது பேக்கை பெற்று சென்றார். நடிகை இந்நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுசெய்து,கண்டனம் தெரிவித்துள்ளார்.