ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், டெல்லியில் விவசாயிகள் போராடி உயிர் நீத்த பின்பே வாபஸ் வாங்கினார்.

கொடுத்த உத்தரவாதங்களை காற்றில் பறக்க விட்டார், இப்போது தலைநகரில் மீண்டும் உயிரை துச்சமாக மதித்து போராடுகின்றனர் உணவளிக்கும் உழவர் பெருமக்கள். முள் தடுப்பு வேலிகள், ஆணி படுக்கைகள், புலிகள் மற்றும் கான்கிரீட் சுவர்கள் அமைத்து அவர்களை வதைக்கின்றனர். இப்படிப்பட்டவர் தான் ஏழைத்தாயின் மகனா என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.