இபிஎஸ் மற்றும் வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்சனை வெடித்துள்ளதாக அண்ணாமலை புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். அதிமுக தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதுதான் தேர்தல் தரும் பாடம். அதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என விமர்சித்துள்ளார். பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 30 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என எஸ்பி வேலுமணி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.