அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து உண்மை குற்றவாளிகளும் வரை அதிமுகவினர் போராட்டம் தொடரும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மாலில் நேற்று அதிமுகவினர் யார் அந்த சார் என்று பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். இதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் கூறியதாவது, எங்கு எது நடக்கும் அதில் நமக்கென்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று பழனிச்சாமி அலைந்து கொண்டிருக்கிறார். அவர் படிக்க வரும் கல்லூரி மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றார். இது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயலாகும். உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு உரிய பதிலளித்த போதும், சுய அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பது போல வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிச்சாமிக்கு கடும் கண்டனம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்த அதிமுக முக்கிய குற்றவாளியான அருளானந்தனை காப்பாற்ற பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டிய கொடூரம் தமிழ்நாடு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். அது மட்டுமா.. உதவி கேட்டு வந்த பெண்ணை ரோட்டிற்கு வா என்று அழைத்து, முன்னாள் அதிமுக அமைச்சரே பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த அசிங்கமும் இந்த ஆட்சியில் தானே நடந்தது. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தி விட்டு தற்போது பெண்கள் நலனில் அக்கறை இருப்பது போல நடிப்பது அவர் அபத்தம்.

எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே வந்து சொல்ல பயந்ததோடு, புகார் பெறவே மாட்டார்கள், அப்படி ஒரு வேலை புகார் பெற்றாலும் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய மாட்டார்கள். அந்த நிலை தற்போது இந்த ஆட்சியில் மாறியுள்ளது. மாணவியின் புகாரை பெற்றவுடன், எவ்வளவு விரைவாக செயல்பட்டு விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தேவையின்றி அரசியல் செய்வதையும் வதந்திகளை பரப்பி மாணவியின் கல்வியோடு விளையாடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.