இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் பல்வேறு விதமாக வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் வாலிபர் ஒருவர் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்ட நிலையில் திடீரென அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே‌ ஹபீஸ் சஜீவ் என்ற வாலிபர் வசித்து ‌ வருகிறார். இவர் இன்ஸ்டாவில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நட்பாக பழகிய நிலையில் அந்த பெண் அந்த வாலிபருடன் சேர்ந்து  ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதில் ஹபீஸ் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காகவே தன் வீட்டின் பக்கத்திலேயே மற்றொரு வாடகை வீட்டை எடுத்து வைத்துள்ளார்.

இங்கு வைத்து  அவர் ரீல்ஸ் எடுக்கும் நிலையில் அந்த இளம் பெண்ணை அங்கு வருமாறு அவர் அழைத்தார். அந்த வீட்டில் வைத்து அந்த இளம் பெண்ணை அவர் பல முறை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடைசியில் அந்த வாலிபர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டதால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.