
இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் தளமான அமேசான் முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது அமேசான் மற்றொரு விற்பனை தொடக்க தேதியை அறிவித்துள்ளது.
பிரைம் உறுப்பினர்களுக்காக சமீபத்தில் பிரைம் டே விற்பனையை நடத்திய நிறுவனம் தற்போது அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்த உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6ம் தேதி இன்று முதல் 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு விற்பனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 6ஆம் தேதி நள்ளிரவு முதல் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.