நாடு முழுவதும் இன்று இரவு 11.59 மணி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற மத்திய அரசு அதற்கு மாற்றாக 2000 ரூபாய் உட்பட புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்தது.

இதனைத் தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் செல்லாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் அந்த கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. எனவே நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.