பி.எஸ்.சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூன் 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதளத்தை அணுக முடியாத மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.