கோடை காலம் என்றாலே பொதுவாக மக்கள் குளிரான பொருட்களை தான் சாப்பிட விரும்புவார்கள். குறிப்பாக ஐஸ்கிரீம் விற்பனை கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் விதமாக தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ் கிரீம் விற்பனை செய்ய ஆவி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆவின் மூலமாக 200க்கும் மேற்பட்ட பால் பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு ள்ளது. இந்த விற்பனையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்