இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோவில்களுடைய நிர்வாகத்தை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள 15 கோவில்களில் ராஜகோபுரம் மற்றும் 18 கோவில்களுக்கு புதிய தேர் 35 கோடியில் செலவில் அமைக்கப்படும்.

இதன் மூலமாக திருச்சி மன்னச்சநல்லூர் ஸ்ரீ லிவனேஸ்வரர் கோயிலில் ஏழு கோடியில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜ கோபுரமும், கும்பகோணம் கீழ்பழையாறை, சோமநாத சுவாமி கோவில், உட்பட 15 கோவில்களில் 26 கோடி செலவில் ராஜகோபுரம், திருவாரூர் பூவனூர் சதுரங்க வல்லப நாதசாமி கோவில், ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு திருமூலநாதர் சுவாமி கோயில் உள்ளிட்ட 15 கோவில்களுக்கு புதிய மரத்தேர் 9.20 கோடி மதிப்பில் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.