இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக சமீபத்தில் MNP விதிமுறைகளை மாற்றுவதற்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முக்கிய முடிவை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அழைப்பாளரின் பெயரை செல்போன் திரையில் அறியும் வசதியை இன்று ஜூலை 15ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.

பிறருடைய எண்களை செல்போனில் சேமிக்காவிட்டாலும் தெரியாதவர்கள் அழைத்தாலும் அவர்களது பெயர் தெரியும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. சிம்கார்டு வாங்கும் போது வழங்கிய தகவலின் படி இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பலரும் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.