“என் மண் என் மக்கள்” யாத்திரையில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது .

மேலும் இன்று மாலை 5 மணிக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.  தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர் என பேசியுள்ளார். மேலும் நோட்டு பெட்டிக்கும் ஓட்டு பெட்டிக்கும் சீமான் அண்ணன் சுற்றுவது போல தெரிகிறது என கூறியுள்ளார்.