பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று கூறியதோடு பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றார்கள். ஆனால் இன்று பாஜகவுடன் கூட்டணி அமைக்க தவம் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை இன்று ஒவ்வொரு பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் உருவாக்கியுள்ளனர். இன்று பாஜக இல்லையெனில் தமிழ்நாடு அரசியல் என்ற சூழ்நிலையை ஒவ்வொரு தொண்டர்களும் இரவு பகலாக உழைத்து உண்டாக்கி இருக்கின்றனர்.

நான் எந்த ஒரு கட்சியையும் தலைவரையும் சிறுமைப்படுத்தி பேசவில்லை. ஆனால் இன்று இந்த நிலைமையில் பாஜக இருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் அந்த அளவுக்கு உழைத்துள்ளோம். எந்த கட்சியுடன் கூட்டணி.? தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும் யார் முதலமைச்சர் போன்றவைகள் பற்றி தேர்தல் சமயத்தில் நாங்கள் பேசுவோம்‌. எங்களுக்கு எந்த கட்சிகளும் எதிரி கிடையாது. மேலும் எங்களுடைய நோக்கம் பாஜக நிலைத்திருக்க வேண்டும். தேசிய தலைவர்கள் கூட்டணி பற்றி தெரிவிப்பார்கள் என்றார்.