சென்னையில் அவ்வப்போது விதவிதமான கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை அடையாறில் மலர் மருத்துவமனைக்கு பின்புறம்இன்று ( மார்ச் 8) முதல் 10 வரை பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பேனா வகைகள் இடம் பெற உள்ளது. இந்த கண்காட்சியின் முக்கியமான விஷயம் என்ன என்றால் ஒரு பேனா ரூபாய் 16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பேனாவின் மதிப்பிற்கு ஒரு காஸ்ட்லி சொகுசு கார் வாங்கிவிடலாம்,. மேலும் 16 லட்சத்திற்கு அந்த பேனாவில் அப்படி என்ன இருக்கிறது என்று நாம் நினைப்போம்.

பேனாவை கொண்டு உலகத்தை மாற்ற முடியும் என்பார்கள் எழுத்தாளர்கள். மேலும் கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது என்பது  வழக்கு மொழியும் உள்ளது .ஒரு சிலர் புத்தகங்களையும் ஓவியங்களையும் வாங்கி குவிப்பது போல பேனாக்களை வாங்கி குவிப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். அது பார்ப்பவர்களுக்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால் அதை தேடி தேடி கலெக்ஷன்களாக வைத்திருப்பவர்களுக்கு தான் தெரியும் அதற்கு பின்னால் இருக்கும் வரலாறு.

அவர்களுக்காகவே சென்னை பாரி முனையில் இந்த பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. 50 பைசா முதல் லட்ச கணக்கில் வரை பேனாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது .  லம்போர்கினி கார் நிறுவனத்திற்கு சொந்தமான பேனா தான் 16 லட்சம் பேனா.  இது போர் வீரர் போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும்.  லம்போர்கினி கார் தயாரிக்கும் பொழுது மிச்சமாகும் பொருட்களைக் கொண்டு இந்த பேனா தயாரிக்கப்படுகிறது. இந்த நிறத்தை பார்த்தாலே வாங்க தூண்டும் அளவிற்கு உள்ளது என்று கூறுகிறார்கள்.