இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் எட்டாம் தேதி இன்று நிகழ உள்ளது. இது இன்று மெக்சிகோவில் தொடங்கி முழு அமெரிக்காவை கடந்து கனடா வரை தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வையே சூரிய கிரகணம் என்று கூறுகிறார்கள். மேலும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் 4 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும்.