முழு சூரிய கிரகணத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணத்தை இரவு நேரம் என்பதால் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் நேரம் என்பதால் காண முடியும். இந்த கிரகணத்தை நாசா நேரலை செய்வதுடன், சர்வதேச விண்வெளி மையத்திற்குள் இருந்து கிரகணம் தெரியும் காட்சியை ஒளிபரப்பவுள்ளது