
நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான, சவுகரியமான பயணத்திற்கும் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்து வருகிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே தண்டவாள பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை ஒட்டி, இன்று ஒருநாள் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அன்றைய நாளில் எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள மின்சார ரயில்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.