
சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் 26 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் ரயில் வழித்தடத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ரயில் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல் அக்டோபர் 24ஆம் தேதி காலை 9 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த நேரத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் வழியாக இயக்கப்படும் 26 புறநகர் மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் மற்றும் கும்மிடி பூண்டியில் இருந்து புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றவாறு பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.