
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ERS மதிப்பாய்வாளர் (Evaluator for Reconciliation Statements) பதவிக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கித்துறையில் பணியாற்ற விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
விண்ணப்ப தொடக்கம்: ஏப்ரல் 2, 2025
கடைசி தேதி: ஏப்ரல் 22, 2025
விண்ணப்பம் செய்ய இணையதளம்: https://sbi.co.in
மொத்த காலியிடங்கள் – 30
தகுதியானவர்கள் யார்?
SBI அல்லது அதன் இணைப்பட்ட வங்கிகளில் SMGS-IV/V கிரேடில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரரின் வயது 63 ஆண்டுகளுக்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவ விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கவனமாகப் படிக்க வேண்டும்.
இந்த வேலை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும்.
சம்பள விவரம்:
மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.65,000 வரை, விண்ணப்பதாரரின் அனுபவத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
நேர்காணலில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு நடைபெறும்.