இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ், புனேவில் இயங்கும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் (NCL) இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் 2025 மே 5 வரை ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதுடன், கணினியில் தட்டச்சு செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாகும்.

பணியின் விவரங்கள்:

பணி: Junior Secretariat Assistant

பணியிடங்களின் பிரிவு மற்றும் எண்ணிக்கை:

General – 11 இடங்கள்

Stores & Purchase – 4 இடங்கள்

Finance & Accounts – 3 இடங்கள்

மொத்தம்: 18 காலியிடங்கள்

சம்பளம்: ரூ.19,900 – 68,200

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி (Higher Secondary), கணினியில் தட்டச்சு திறன் அவசியம்.

வயதுவரம்பு: 5.5.2025 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது சலுகை:

SC/ST: 5 வருடங்கள்

OBC: 3 வருடங்கள்

மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்: அரசாணை விதிப்படி

தேர்வு முறை:

Computer Typing Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி: ரூ.500

SC/ST/மாற்றுத்திறனாளிகள்/Ex-Servicemen: கட்டணம் விதிவிலக்கு

கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruit.ncl.res.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 2025 மே 5

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பை இணையதளத்தில் பார்வையிடலாம்.