தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களானது tnpsc மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அறிவிப்புகள் வெளியாகி வருடம் தோறும் 1000கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 10,000க்கும் அதிகமான உதவி பொறியாளர்கள், கள உதவியாளர்கள் பணிகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்முறையாக தேர்வுகளின் மூலம் இந்தப் பணிகள் நிரப்பப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக 200 டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணிகள் நிரப்பப்பட இருக்கின்றன. லஞ்சம் பெற்று பணி வழங்கப்படும் முறை இதன்மூலம் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.