கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான சோதனையில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இந்த சேவை தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 16 முதல் 21 நிமிடத்திற்குள் உங்களின் ஆர்டர் கைக்கு வர 29 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணம் Zomato கோல்ட் சப்ஸ்கிரைபருக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.