இந்தியாவில் மத்திய அரசு நிர்ணயத்தில் உள்ள தொகையை விட அதிக வருமானம் ஈட்டும் பட்சத்தில் வருமான வரி கணக்கை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் தங்களுடைய சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை அல்லது செப்டம்பர் மாத காலத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும். இதைத் தவறினால் மார்ச் மாதத்தில் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமானத்தை விட அதிகமான வரி செலுத்தி இருந்தால் உபரி வரியை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து மூன்று மாதங்களில் நீங்கள் வட்டியுடன் பெறலாம். வருமான வரி தாக்கல் மற்றும் சிபிசி இணையதள நிறுவனம் இரண்டும் வேறு வேறுாக இருந்த காரணத்தால் மட்டுமே இதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது மத்திய அரசை இந்த இரண்டு செயல்களுக்குமான ஒப்புதலை இன்போசிஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு 4241 கோடி செலவில் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த திட்டம் தொடங்கப்படும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்த மறுநாளே உபரி வரி மீண்டும் மக்களுக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.