தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் இணைய வழியில் மேற்கொண்டு வர அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி போக்குவரத்து துறையில் மொத்தம் உள்ள 48 சேவைகளில் 6 சேவைகள் அதாவது ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் தேவையான விவரங்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் முற்றிலுமாக ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 42 சேவைகளையும் தற்போது ஆன்லைன் மூலமாக செய்யும் படியான நடவடிக்கையை அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக நகல் பழகுணர் உரிமம் மற்றும் நகல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 25 சேவைகள் இணையதளம் மூலமாக பெரும் முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.