சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி சார்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஏழை மக்கள் அதிக அளவில் வாங்குவதால் இந்த வரி விதிப்பு அவர்களை பெருமளவில் பாதிக்கக் கூடும் என கூறப்படுகிறது.